குரும்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் வாசல் கால் வைக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டினம் அருகே உள்ள குரும்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் வாசல் கால் வைக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் .ஒன்றியம், குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வினாயகர் திருக்கோவில் உள்ளது.

சுமார் ஐந்து தலைமுறை மேலாக மக்கள் வழிபட்டு வரும் இந்த ஶ்ரீவிநாயகர் திருக்கோயிலினை புதுப்பிக்கும் வகையில் புதியதாக திருக்கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கோயிலின் கட்டுமான பணியின் போது இன்று திருக்கோவில் வாசல் கால் அமைப்பற்கான பூஜைகள் நடைப்பெற்றது. ஶ்ரீ வினாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீ வினாயகர் திருக்கோவிலுக்கு ஐதீக முறைப்படி வாசல் கால் அமைக்கப்பட்டது,
குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த மந்திரிகவுண்டர்
கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன், காவேரிப்பட்டினம் ஒன்றிய திமுக செயலாளர் சி.சுப்பிரமணியன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபரும், தேங்காய் வியாபாரியுமான சுந்தரம், தேங்காய் வியாபாரி கர்ணன், கோவில் தர்மகர்த்தாக்கள் முத்துவேல், ஓய்வு பெற்ற பட்டு வளர்ச்சி துறை அலுவலர் முத்துசாமி, வெற்றிலை வியாபாரி வஜ்ரவேல், சந்தோஷ், மயில், முன்னாள் ராணுவ வீரர் குமார், ஓட்டுனர் பழனி, செல்வம் மற்றும் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள் மட்டுமின்றி கிராம மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
