த.வெ.க.-,வில் இருந்து விலகி திமுக வில் இணைந்த தொண்டர்கள். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், ஆலப்பட்டி ஊராட்சி, வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த தவெக.கட்சி உறுப்பினர்களான ரகு, இளையராஜா, சிலம்பரசன்,வினோத், பிரபாகரன், திம்மப்பன் ஆகியோர் தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அவர்களை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., MLA சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக் கொண்டு வரவேற்றார், உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ