கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நுகர்வோர் குழு கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நுகர்வோர் குழு கூட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக காவலர் பூத் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளி அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் புகார் மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக் கொண்ட இக்கூட்டத்திறகு சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நல சங்க மாநில பொதுச் செயலாளரும்,முன்னாள் தமிழ்நாடு அரசு பொது விநியோக திட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.


இதனைத் தொடர்ந்து டாக்டர் சந்திரமோகன் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளி அவர்களிடம் வழங்கினார்.
அப்போது பேசிய டாக்டர் சந்திர மோகன் ......
கிருஷ்ணகிரி பழையபேட்டை பேருந்து நிலையத்தில் தொடர்கதையாக சில சமூக விரோத செயல்கள் நடப்பதால் அங்கு காவலர் பூத் அமைத்துகாவலர்கள் நோந்து பணியில் துரிதப்படுத்திட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் இயங்கும் மருந்தகத்தில் போதிய அளவில் மருந்துகள் இல்லாதால் பொது மக்களுக்கு தேவையான மருந்துக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் ரேசன் கடைகளில் இருந்து திருட்டுத்தனமாக ரேசன் அரிசிகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சந்திரன் மற்றும் ஜெய்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
