கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளினை முன்னிட்டு ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவினை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் வழங்கினார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளினை முன்னிட்டு ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவினை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தின் 54 -வது பிறந்தநாள் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது,


இதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏகம்பவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணகிரி டான்சி விளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வினாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
இந்த பூஜையின் போது கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன், நோய் நொடி இன்றி நலமாக வாழ்ந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திட வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இல்லத்தில் கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, பின்னர் ஆரவவற்ற இல்லத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு காலை உணவினை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏகம்பவாணன் வழங்கி சிறப்பித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் ஆஜீத் பாஷா,
இளைஞரணி மாவட்ட செயலாளர் சதாம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நித்தியானந்தம், சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, இளைஞர் காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் நசீம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
