நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார் .!

தென்காசி

நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார் .!

நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார் 

தென்காசி, நவ -30

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன்  வழங்கினார்.

 நெட்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து, 
84 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெட்வொர்க் அரசு மேல்நிலை பள்ளியின்  முதல்வர் சங்கர் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் சாகுல் ஆலம், பவளக்கொடி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மூர்த்தி இருளப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்