விஜயபிரபாகரன் பிறந்த நாளை பாலாபிஷேகம் செய்தும், கேக் வெட்டியும் கொண்டாடிய தேமுதிக. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம்,காவேரிப்பட்டினத்தில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் பிறந்த நாளினை முன்னிட்டு பிரபாகரனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன் பிறந்த நாளினை முன்னிட்டு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் காவேரிப்பட்டினம் காமராஜர் பேருந்து நிலையம் வைக்கப்பட்டு இருந்த விஜய் பிரபாகரனின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமாகக் கொண்டாடப்படது. இதனைத் தொடர்ந்து கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.


மேலும் இந்த விழாவிற்கு காவேரிப்பட்டினம் ஒன்றிய தேமுதிக துணைச் செயலாளர்கள் சிவகுமார், சரவணன், சின்னசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், திருப்பதி, சிவகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், ஒன்றிய மகளிர் அணி லட்சுமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் டீக்கடை பெரியசாமி,தொழிற்சங்கம் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,
மேலும் இந்த விழாவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கணக்கண், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சண்முகம், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சூர்யா, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சுந்தர் மற்றும் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக கட்சியை சேர்ந்த சக்தி, திருப்பதி, அருள், தமிழ், சௌந்தர், மனோஜ், லோகு, ரஜினிநாதன், ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
