அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோவிலுக்கு  சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியினை முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், பீமண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தில் புதியதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு 
ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவில் சுற்று சுவர் கட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான எல். சுப்பிரமணியன் ரூ.5 லட்சம் நிதி உதவியினை வழங்கினார்.

இதனை அடுத்து  அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பொதுக் குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு கொல்லப்பள்ளி ஊர்கவுண்டர் தலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருக்கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியினை எல். சுப்பிரமணியன் பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.

அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், முன்னாள் மீமாண்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ