விஜய்யின் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மரியமுல் ஆசியா .!
த வெ க
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் இணைந்துள்ளனர்.
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ (ஓமலூர் தொகுதி) பல்பாக்கி கிருஷ்ணன் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது தம்மை தவெகவில் இணைத்துக் கொண்டார் பல்பாக்கி கிருஷ்ணன்.
இதனால் பல்பாக்கி கிருஷ்ணன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. மரியமுல் ஆசியா, நேற்று (டிசம்பர் 28) செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
