புளியரையில் தேமுதிக சார்பில் நவ 30 ல் ஆர்ப்பாட்டம்.!
தென்காசி
புளியரையில் தேமுதிக சார்பில் நவ 30 ல் ஆர்ப்பாட்டம்
மாவட்டச் செயலாளர் பழனி சங்கர் ஆட்சியரிடம் மனு
தென்காசி நவ 21
கேரள மாநிலம், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்துக்கு கடும் இடையூறு செய்யும் கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனங்களை 2 மாதத்திற்கு நிறுத்தக் கோரி நவம்பர் 30 ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, மாவட்ட ஆட்சியர் ஏ.கே கமல் கிஷோரிடம் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் எம்.பழனி சங்கர் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு தென்காசி, செங்கோட்டை, புளியரை எஸ். வளைவு வழியாக தினசரி 5000 வாகனங்களில் பக்தர்கள், சபரிமலை சென்று வருகிறார்கள்.
மேலும் சபரிமலையில் இருந்து தரிசனம் முடித்து விட்டு தினசரி சுமார் 7,000 வாகனங்கள் குற்றாலத்திற்கும், திருச்செந்தூருக்கும் செல்லுகின்ற பாதையாக புளியரை, செங்கோட்டை, தென்காசி உள்ளது.
இந்த வழியில் தினசரி கேரளாவிற்கு கனிமவள வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருவதால் போக்குவரத்திற்கும் சபரிமலை சென்று வருகின்ற பக்தர்களுக்கு கடும் இடையூறாகவும் மேலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாலும் இரண்டு மாதத்திற்கு கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி வருகின்ற நவம்பர் 30 அன்று புளியரையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தேமுதிக சார்பாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் தலைமையில் நடை பெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் நெடுவயல் குமார், கடையநல்லூர் சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கமாரி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சண்முகவேல் என்ற சரவணன், தென்காசி நகர செயலாளர் பேச்சி, ஆலங்குளம் நகர பொருளாளர் ராஜேந்திரன் என்ற தாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
