அரசு மேல்நிலைப் பள்ளி, பயிலும் 236 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், ஐகுந்தம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருகோபனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, தொகரப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, பயிலும் 236 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
உடன் பள்ளி ஆசிரியர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
