ஆழ்வார்குறிச்சி சைவ வேளாளர் சங்கத்தில் வ உ சிதம்பரம் பிள்ளை 89வது நினைவு தினம்.!
தென்காசி
ஆழ்வார்குறிச்சி சைவ வேளாளர் சங்கத்தில் வ உ சிதம்பரம் பிள்ளை 89வது நினைவு தினம்
தென்காசி நவ 21
ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்கத்தில் வைத்து வ உ சி
89வது நினைவு தினம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வ உ சி யின்
படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சங்கரநாரயணன் தலைமை வகித்தார்.

மேனாள் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வ உ சிதம்பரம் பிள்ளையின் செயற்கரிய தியாக செயல்கள் நினைவுகள் குறித்த எழுச்சியுரைகளை சங்க கௌரவ ஆலோசகர்கள் நல்லாசிரியர் மாடசாமி,ராமலிங்கம்உப தலைவர் முத்து, பொருளாளர் குமார், துணை பொருளாளர் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஆறுமுகம், அத்ரி ஆறுமுகம், சாய் சுப்பிரமணியன், மற்றும் மூத்த உறுப்பினர்கள் முத்தையா, நடராஜன்
ஆதிமூலம், சிவ சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்க செயலாளர் ஆசை மாணிக்கம் செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்
