என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி.ஆலோசனைக் கூட்டம். !
கிருஷ்ணகிரி
என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பருகூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் (BDA) ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பருகூர் சட்ட மன்ற உறுப்பினருமான D.மதியழகன்,MLA, வழிகாட்டுதலின்படி நிர்வாகிகளுடனான காணொளி காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டம் 31-10-2025 வெள்ளிக்கிழமை மாலை.4.00 மணியளவில் போச்சம்பள்ளி ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்....
வாக்காளர்கள் தொடர்பான சரியான தரவுகளை உறுதி செய்வது எப்படி?
BLA-2 மற்றும் BDA-வின் குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகள் என்ன?
SIR (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) எப்படி மேற்கொள்ள வேண்டும்?
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
இவையனைத்தும் குறித்து ஆலோசிக்கப்பட்ட ஒரு பயனுள்ள பயிற்சி கூட்டமாக அமைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், BLA-2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட கழக நிர்வாகிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் க.மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
