மங்கம்மாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 350 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள மங்கம்மாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 350 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது,
கிருஷ்ணகிரி அருகே உள்ளகிட்டம்பட்டி மங்கம்மாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றிருந்தன.
அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில்120 மீட்டர் தூரத்தைமிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளின் உரிமையாளருக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள்மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்கள்.வழங்கப்பட்டது, எருது விடும் விழாவில்ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். இந்த எருது விடும் விழாவினை மங்கம்மாபுரம் ஊர் பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இதே போல வருகின்ற 28-ம் தேதி சின்ன மோட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான முதலாம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெற்றிபெற உள்ள அனைத்து எருதுகளுக்கும் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
செய்தியாளர்
மாருதி மனோ
