கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 29 லட்சம் மதிப்பிலான சாலைகள். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 29 லட்சம் மதிப்பிலான சாலைகள். !

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படியும், கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  பர்கூர் வடக்கு  ஒன்றியம், ஒரப்பம் ஊராட்சியில் ரூ.14.15 இலட்சம் மதிப்பீட்டில் ஒரப்பம் –செந்தாரப்பள்ளி சாலை முதல் சின்ன ஒரப்பம் கிராமம் வரை சாலை மேம்பாடு செய்தல் மற்றும் ரூ.14.490 இலட்சம் மதிப்பீட்டில் எலத்தகிரி –சூரன்கொட்டாய் சாலை முதல் காத்தாடிகுப்பம் கிராமம் வரை சாலை மேம்பாடு செய்தல் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன்., MLA, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ