கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பாக தின்னைப் பிரச்சாரம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பாக தின்னைப் பிரச்சாரம். !

திமுக ஆட்சியின் நான்கறை ஆண்டுகளில் 7000 கொலைகள் நடந்துள்ள இந்த ஆட்சி மக்களுக்கானதா எனக்கூறி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கிய அம்மா பேரவை மாநில துணை செயலாளர், முன்னாள் அமைச்சர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, கிழக்கு பகுதிக்குட்பட்ட இராயக்கோட்டை சாலையில் அதிமுகவின் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ் தலைமையில், பகுதி செயலாளர் ராஜீ ஏற்பாட்டில், திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கலசப்பாக்கம் v பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி பின்னர் இராயக்கோட்டை சாலை பகுதிகளில் வணிகர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டறிக்கைகளை வழங்கினர்..

அப்போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் பேசும்போது....

திமுகவின் நான்கறை ஆண்டுகால ஆட்சியில் 7000 கொலைகள் நடந்து 5 லட்சம் கோடி கடன் வாங்கி அனைவரையும் கடன்காரர்களாக மாற்றி உள்ளனர்.. இதுபோன்ற திறனற்ற அரசு மீண்டும் தமிழகத்திற்கு தேவையா என உணர்ந்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


 நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ்,பேரவை மாவட்ட இணை செயலாளர் செல்வம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி ஹேமா குமார், தில்ஷத் ரகுமான், குபேரன் என்கின்ற சங்கர், சிவராமன், வழக்கண்ணீர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் ஆதி வெங்கடாசலம், முன்னாள் கவுன்சிலர் அராப்ஜாம், சூடப்பா, தனபால் மற்றும் பேரவை மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், கழக நிர்வாகி ஆதி, பொதுமக்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ