குரு பௌர்ணமியையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் .!

கிருஷ்ணகிரி

குரு பௌர்ணமியையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்  .!

குரு பௌர்ணமியையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் : ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகையில், ஊராட்சி ஒன்றிய தெலுங்கு துவக்க பள்ளியில் குரு பௌர்ணமியையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஷீரடி சாய்பாபா பக்தர்கள் குழு சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் செயின் பீட்டர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டிரஸ்ட் செகரட்டரி டாக்டர் லாசியா தம்பிதுரை, பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ன பையா, சாரதி, vmm கிருஷ்ணப்பா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்

இந்த முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் பெண்களுக்கான பிரச்சனைகள் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் கை கால் மூட்டு வலி, பல் சிகிச்சை காது மூக்கு தொண்டை சிகிச்சை கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 

முகாமுக்கு வந்த கண் நோயாளிகளுக்கு இலவச கண்ணாடியும், இலவச சாப்பாடும் இலவச பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  

நிகழ்ச்சியில் மருத்துவர் பார்வதி, மருத்துவர் கிரீஸ் ஓங்கல், சாதிக், சன் பீட்டர் மருத்துவமனை பிஆர்ஓ செல்வம், கூட்டுறவு சங்கத் தலைவர், மஞ்சுநாத் சங்கர் நாயுடு, ரவி, ரத்னாப்பா, பிரகாஷ், ராஜா ரவி, பிரகாஷ், வெங்கடேஷ், வெங்கடேஷ் குருதேவேந்திரா, சிவா, ரகுநாத் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்,

செய்தியாளர்

மாருதி மனோ