கோவை வந்த மலேசிய நாட்டு எம்.பி, ஜனநாயன் இசை வெளியீடு நிகழ்ச்சி குறித்து கருத்து. !
கோவை
கோவையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேசியா எம்.பி தத்தோ ஸ்ரீ சரவணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, கோவையில் ஆசாத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளேன். சமயத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு செயல்படுபவர் ஆசாத். அவருடைய நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெறுகிறது. அதில் வெளிநாட்டு தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளேன் என்றார்.
இந்தியா - மலேசியா தொழில் முதலீடுகள் குறித்தான கேள்விக்கு, நீண்ட நாட்களாகவே இந்தியா - மலேசியா வர்த்தக தொடர்பு நன்றாக இருந்து வருகிறது. அதிக முதலீட்டு நிறுவனங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர் குறிப்பாக இருவழிப்பாதைகளில் நீண்டகால வர்த்தக தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
மலேசியாவில் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது தொடர்பான கேள்விக்கு அவருடைய கலை நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றது என பதில் அளித்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் அரசியல் தொடர்பான கேள்விக்கு அவருக்கு வாழ்த்துகள் என கூறினார்
