சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஒன்றரை லட்சம் வரை இலவச சிகிச்சை மீட்பவர்களுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை.!

இந்தியா

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஒன்றரை லட்சம் வரை இலவச சிகிச்சை மீட்பவர்களுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை.!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் சாலை விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கான பணமில்லா சிகிச்சை மற்றும் நிதியுதவி திட்டங்களை அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், விபத்தில் காயமடைந்தவர்களின் முதல் ஏழு நாள் மருத்துவச் செலவிற்காக மத்திய அரசு 1.5 லட்சம் ரூபாய் வரை வழங்கும். மேலும், பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 'ராக்-வீர்' விருதும் 25,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்ய நவீன வசதிகளுடன் கூடிய அவசரக்கால உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 50,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கட்கரி தெரிவித்தார். 2030-ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.