டைம் பாஸ் தேனீர் கடையை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி திறந்து வைத்து முதல் விற்பனையும் துவக்கி வைத்தார்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் புதியதாக துவங்கப்பட்டுள்ள டைம் பாஸ் தேனீர் கடையை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி திறந்து வைத்து முதல் விற்பனையும் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் புதியதாக துவங்கப்பட்டுள்ள டைம்பாஸ் என்ற தேனீர் கடை திறப்பு விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணைப்பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி வருகை தந்த அவருக்கு தேனீர் கடையின் உரிமையாளரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட பொருளாளரும் முன்னாள் கவுன்சிலருமான கோபி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் புதியதாக துவங்கப்பட்டுள்ள டைம் பாஸ் என்ற தேனீர் கடையை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும்
அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, தேனீர் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையையும் துவக்கி வைத்து வாழ்த்தினார்கள்.
இந்த விழாவின் போது ஒன்றிய செயலாளர்களான சோக்காடி ராஜன், கன்னியப்பன், சூரிய பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெயஆஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இந்த விழாவில் அதிமுக கட்சியை சேர்ந்த பூசாரிப்பட்டி ரமேஷ் குமார், ஆவின் வெங்கடசலம், தாபா வெங்கட்ராமன், தீர்த்தகிரி, குமரேசன், ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ