ஹெக்பஞ்சத்தன் தர்காவில், மஹபூப் சுபானி பண்டிகையை முன்னிட்டு கொடியேற்று விழா.!

கிருஷ்ணகிரி

ஹெக்பஞ்சத்தன் தர்காவில், மஹபூப் சுபானி பண்டிகையை முன்னிட்டு கொடியேற்று விழா.!

கிருஷ்ணகிரி - சுங்கசாவடி அருகே உள்ள ஹெக்பஞ்சத்தன் தர்காவில், மஹபூப் சுபானி பண்டிகையை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கொடியுடன் 1000 கிலோ எடை கொண்ட மலர் மாலையும் ஏற்றி வைக்கப்பட்ட இந்த விழாவில் மூன்று மாநிலமக்கள் சாதி மத வேறுபாடுகள் இன்றி பங்கேற்பு.

கிருஷ்ணகிரி  சுங்கச்சாவடி அருகே உள்ள ஹெக்பஞ்சத்தன் தர்காவில்,மஹபூப்சுபானி பண்டிகையை முன்னிட்டு கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் முன்னதாக சந்தனகுடம் மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமாக 1000 கிலோ எடைக் கொண்ட மலர் மாலையும், எடுத்துக்கொண்டு 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில் மதகுருமார்கள் முன்னிலையில்
சிறப்பு துவா மற்றும் பாத்தியா நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து சங்கல் தோப்பு தர்காவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடிக்கு சந்தனம் பூசியும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு ஹெக்பஞ்சத்தன் தர்கா-வில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கொடி மரத்தில் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. சிறப்பு பாத்தியாவில் மதகுருமார்கள் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கபாலிஇசைக் கச்சேரி நடைபெற்றது


மேலும் இந்த விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான மக்கள் சாதி, மத வேறுபாடு இல்லாமல் ஏராளமானோர் கலந்துக் கொண்டு,  நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் நலமுடன் வாழவேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் சிறப்பு துவா மேற்கொண்டனர்

பின்னர் இந்த விழாவில் கலந்துக் கொண்ட சுமார் இரண்டாயிரம் பேருக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை  அன்சர் மற்றும் ஹெக்பஞ்சத்தன் தர்கா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ