அபகரிக்கப்பட்ட நிலத்தினை மீட்டுத்தர வலியுறுத்தி மாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.!

கிருஷ்ணகிரி

அபகரிக்கப்பட்ட நிலத்தினை மீட்டுத்தர வலியுறுத்தி மாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பூர்வீக நிலத்தினை அபகரித்ததோடு கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் குப்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபகரிக்கப்பட்ட நிலத்தினை மீட்டுத்தர வலியுறுத்தி மாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கோனரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்  முனி சந்திரப்பா கண்தெரியாத  மாற்றுத் திறனாளியான இவரது பூர்வீக நிலம் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை முனிசந்திரப்பாவின்  சித்தப்பாவின் மகன்களான கேசவன், அதிமுக கட்சியை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் மாபியா கும்பலுடன் சேர்ந்து நிலத்தினை அபகரித்து விற்பனை செய்ததோடு அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்து வருவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து வருவதால் வீட்டில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது.

இது தொடர்பாக சூளகிரி காவல் நிலையம் உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்களுக்கு புகார் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் அதிமுகவை சேர்ந்த கேசவன் மற்றும் அவரது தம்பிகளான ஜெயராமன், முதிராஜ் மற்றும் ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி முனி சந்திரப்பா, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை  சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போசிய அவர் 1957 ம் ஆண்டு தனது பெற்றோரால் வாங்கப்பட்ட பூர்விக சொத்தான 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தினை தன்னுடைய சித்தப்பா மகன் கேசவன் மற்றும் ரியல் எஸ்டேட் குப்பலை சேர்ந்தவர்கள்  முறைகேடாக பட்டா மாற்றி விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

ஆகையால் எங்களது பூர்வீக நிலத்தை அபகரித்து உள்ளவர்களிடம் இருந்து நிலத்தினை மீட்டு கொலை மிரட்டல் விடுத்து வரும் அதிமுக கட்சியை சேர்ந்த கேசவன் மற்றும் நில புரோக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ