அவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் துவக்கம் .!
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை) சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ள புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, 35 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.
உடன் திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நல உதவி ஆனையர் மாதேஸ்வரன், ஐடிஐ கல்லூரி முதல்வர் (பொ) சாமுவேல் அய்யாதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ