வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் .!

வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி. சேகர் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் மற்றும் அரையாண்டு முடிந்து வகுப்பாயவு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது,

இக்கூட்டத்திற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பி.சி.சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் தேர்ச்சி  குறித்து சிறப்புரை ஆற்றினார் ,

மேலும் இப்பள்ளி  பத்தாம் வகுப்பு அரசு பெது தேர்வில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது, தற்போது அரையாண்டு தேர்வு முடிந்துள்ளது, இதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

அதுபோல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முழு ஆண்டு தேர்வான பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இப்பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகள் நன்கு படித்து தொடர்ந்து 16-வது ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்ற பள்ளி என்பதை நிரூபிக்க வேண்டும்,  அதற்கு ஆசிரியர்கள் மட்டும் போதாது  பெற்றோர்களாகிய நீங்களும் தங்கள் குழந்தைகளை உறுதுணையாக இருந்து படிப்பதை  கவனித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் வருகின்ற 10-ம் வகுப்பு அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெறமுடியும் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது பள்ளியின் ஆசிரியர்களான சகாய ஆரோக்கியராஜ்,
திருமதி அமலா ஆரோக்கியமேரி, சிவகுமார், சதிஷ், முனிராஜ், 
தனஞ்ஜெயன், திருமதி சுபாசினி உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ