அருள்மிகு நாகம்மன் திருக்கோவில் 17 ஆம் ஆண்டு பாலாபிஷேக விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே நாகவனத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நாகம்மன் திருக்கோவில் 17 ஆம் ஆண்டு பாலாபிஷேக விழாவில் 52 கிராம மக்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன தக்கேப்பள்ளி நாகவனத்தில் எழுந்தருளியுள்ள நாகம்மன் திருக்கோவிலில் 17-ம் ஆண்டு நாக சதுர்த்தியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் முன்னதாக ஸ்ரீ நாகம்மா திருக்கோவில் நிர்வாகிகளான திருமதி வள்ளியம்மாள் சென்றாயன் பூசாரி ரோணுசாமி, சோமசுந்தரம் ஐயர் வீமண் ஆகியோர் தலைமையில் சின்ன தக்கேப்பள்ளி கிராமத்தில் இருந்து பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சின்னதக்கேப்பள்ளி, மாளகுப்பம் வழியாக, நாகவனம் கோவிலுக்கு பம்பை வாத்தியம் முழங்க, அம்மன் வேடமிட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் இயற்கை அழகுடன் மிக பிரமாண்டமான நிலையில் எழுதருளிய நிலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிலையில் அமைந்துள்ள
நாகம்மனுக்கு பாலாபிஷேகம் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் சின்னதக்கப்பள்ளி, பெரியதக்கப்பள்ளி, பெரிய கோட்டப் பள்ளி, கள்ளீயூர், கம்பம்பள்ளி, ஒண்டியூர், கரடியூர் உள்ளிட்ட 52 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி ஆந்திரா,கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு, உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், உலக மக்கள் யாவரும் நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டியும், பாலாபிஷேகம் செய்து சிறப்பு
வழிபாட்டில் ஈடுபட்டனர்,
இந்த விழாவினைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ