மரத்தில் ஏறி போக்கு காட்டிய 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பினை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மரத்தில் ஏறி போக்கு காட்டிய 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பினை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர். போராடி பிடித்த பாம்பினை ஏராளமானவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் சாலையோரம் இருந்த பெரிய வேப்ப மரத்தில் மிகப்பெரிய அளவில் பாம்பு ஒன்று அங்கும், இங்குமாக தாவி, தாவி ஊர்ந்து சென்றதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் அந்த பாம்பினை வேடிக்கை பார்தத்துடன், சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
ஆனால் பாம்பு எங்கு செல்வது என்று தெரியாமல் மரத்தின் கிளைகளில் ஊர்ந்த நிலையில் காணப்பட்டது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் தாவிய நிலையில் இருந்த பாம்பினை நீண்ட நேரம் போராட்டதிற்குப் பிறகு அந்த சாரை பாம்பினை போராடி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பு சாரை பாம்பு என்பதும், சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த பாம்பினை தீயணைப்பு துறையினர் எடுத்துச்சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விஷப் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. இன்று மட்டும் கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் நாகப்பாம்பு, மலைப்பாம்பு, மண்ணுளி பாம்பு, சாரை பாம்புகள் என 9 பாம்புகளை பிடித்து உள்ளதாக வனத்துறையினர்கள் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாருதி மனோ