வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026, வாக்காளர் படிவம் நிரப்புவது குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் .!

கிருஷ்ணகிரி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026, வாக்காளர் படிவம் நிரப்புவது குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026, வாக்காளர் படிவம் நிரப்புவது குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார.

உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராமஜெயம், தேர்தல் வட்டாட்சியர் சம்பத், வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ