சிலம்பம் மற்றும் சதுரங்கப் போட்டியில் டி.கே.சாமி பள்ளி மாணவர்கள் வெற்றிப் பெற்று சாதனை பள்ளி - முதல்வர் பாராட்டு.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட சரக அளவில் நடைபெற்ற சிலம்பம் மற்றும் சதுரங்கப் போட்டியில் டி.கே.சாமி பள்ளி மாணவர்கள் வெற்றிப் பெற்று சாதனை பள்ளி - முதல்வர் பாராட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சரக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் நடத்தப்பட்ட சதுரங்கம் மற்றும் சிலம்பம் போட்டியில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் அமைந்துள்ள டி.கே.சாமி மெட்ரிகுலேஷன் பள்ளியின் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் சாதிக் சதுரங்கப் போட்டியில் சரக அளவில் முதலிடமும் பெற்று அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் தகுதி பெற்றுள்ளார்,
மேலும் சரக அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிலம்பம் போட்டியில் டி.கே. சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் முதலிடம் பிடித்த 9-ம் வகுப்பு மாணவன் அமீன், அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள்.
மேலும் மாவட்ட அளவில் சாதனைப் படைத்து பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ள மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர், பள்ளி முதல்வர் திருமதி பிரபா சேவியர், பள்ளியின் செயலாளர் செல்வி சோபியா ராணி, பள்ளியின் துணை முதல்வர் வெங்கட்ராமன் மற்றும் உடற்கல்வி ஆசிரியரும் சிலம்பம் பயிற்சியாளருமான ஏஜாஸ் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ