கிருஷ்ணகிரியில் கலைஞரின் நினைவு நாளினை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கலைஞரின் நினைவு நாளினை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி .!

கிருஷ்ணகிரியில் கலைஞரின் நினைவு நாளினை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் கலைஞர் திருவுருவச் சிலைக்கு  சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அவர்களின் 7-ம் ஆண்டு நினைவு தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைதிப்பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் கிருஷ்ணகிரி சென்டரல் தியேட்டர் அருகில் இருந்து  மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணியானது லண்டன் பேட்டை, சென்னை சாலை, பெங்களூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை வழியாக சென்ற  பேரணியானது, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருஉருவச் சிலை முன்பாக நிறைவடைந்தது. இதனையடுத்து  எழுத்து கலைஞரின் திருஉருவச் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து நகர் மன்றத் தலைவர் திருமதி பரிதா நவாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், நரசிம்மன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வெற்றிச்செல்வன், சுகவனம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ் மற்றும் நகர பொறுப்பாளர்களான அஸ்லாம், வேல்மணி, நகர்மன்ற உறுப்பினர் டாக்டர் சுரேஷ்குமார், மீசை அர்சுனன் , மாவட்ட  மகளீர் தொண்டர் அணி அமைப்பாளர் புஸ்பா உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த அமைதி பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டு கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

மாருதி மனோ