வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, மகளிர் திட்டம் சார்பாக 58 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 47 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வழங்கினார்.!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினர் கிருஷ்ணகிரி நகராட்சியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரக் கிளை பணிமனை, ஓசூர் தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டை, ஓசூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜீனூர் அரசுத் தோட்டக்கலைப் பண்ணை ஆகிய இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, மகளிர் திட்டம் சார்பாக 58 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 47 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வழங்கினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ