டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி.!

தென்காசி

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி.!

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி

தென்காசி பகுதியில் தீவிர வாகன தணிக்கை

தென்காசி, நவ - 12

டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில்  அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி,, வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் ஆலங்குளம் கடையம் உள்ளிட்ட காவல் உள்கோட்ட பகுதிகளில் திங்கள் கிழமை இரவுமுதல் செவ்வாய்க்கிழமை காலை வரை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன், மேற்பார்வையில் கடையநல்லூா்  இன்ஸ்பெக்டர்  கிறிஸ்டி  தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும்   ஏராளமான போலீஸாா் சாலையின் குறுக்கே பேரிக்காடு அமைத்து சாலைகளின் வெவ்வேறு பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

 கணையம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாவட்ட எல்லை  பகுதியிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உள்கோட்ட பகுதிகளில் திங்கள் கிழமை இரவுமுதல் செவ்வாய்க்கிழமை காலை வரை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில்  அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.

 ஆலங்குளம் டிஎஸ்பி ஜோஸ் மற்றும் ட்ரெய்னிங் டிஎஸ்பி லோகநாதன்  மேற்பார்வையில் ஆழ்வார்குறிச்சி  இன்ஸ்பெக்டர்  சண்முக நாயனார்  தலைமையில் கடையம் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும்  தனிப் பிரிவு காவலர் ரவி மற்றும் ஏராளமான போலீஸாா் சாலையின் குறுக்கே பேரிக்காடு அமைத்து சாலைகளின் வெவ்வேறு பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

செய்தியாளர்

AGM கணேசன்