மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நினைவு தினம் .!

தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நினைவு தினம் .!

மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நினைவு தினம் 

தென்காசி ஆகஸ்ட் 7

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூர் திமுக சார்பில் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம்வழக்கறிஞர் வேலுச்சாமி மன்ற உறுப்பினர்கள் கபிலன் சிங்கதுரை பொருளாளர் ரமேஷ் குமார் ஒன்றிய பிரதிநிதிகள் யாகவா சுந்தர், நன்னை பாலசுப்பிரமணியன் பூபதி, மாவட்ட பிரதிநிதி சுந்தரம் என்ற சேகர் அவை தலைவர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், காசிவிஸ்வநாதன், குருசாமி, குத்தாலிங்கம், குடியிருப்பு கணேசன், பகவதி ராஜ், கபீர், குமாரவேல் முருகன் ஆறுமுகசாமி, விக்னேஷ், நன்னை மாரி, பார்த்திபன், அருண், கனி கணேசன், சுப்பிரமணியன், சந்திரன், மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்