தென்காசியில், நவ 20ல், 97 வாகனங்கள் பொது ஏலம்.!
தென்காசி
தென்காசியில், நவ 20ல், 97 வாகனங்கள் பொது ஏலம்
தென்காசி எஸ்.பி அரவிந்த் தகவல்
தென்காசி, நவ - 11
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 97 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம். தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 02 நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் மொத்தம் 97 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 20.11.2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 17.11.2025 ஆம் தேதி முதல் 19.11.2025 ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நேரில் பார்வையிடலாம். மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 94884-88933 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
