தமுமுக மற்றும் காரமடை காளம்பாளையம் ஆஷுர்கானா நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சந்திப்பு.!

கோவை

தமுமுக மற்றும் காரமடை காளம்பாளையம் ஆஷுர்கானா நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சந்திப்பு.!

தமுமுக மற்றும் காரமடை காளம்பாளையம் ஆஷுர்கானா நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சந்திப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை காளம்பாளையம் கிராமம். காளம்பாளையம் ஆஷூர்கானா பள்ளி வக்ஃப் (G.S. 24/25/கோவை ஆகிய இரண்டு வக்ஃப்களும் க.ச.எண் 474 (0.49ஏக்கர்) பள்ளிவாசல் மற்றும் க.ச.எண் 475 (1.13)ஏக்கர் முஸ்லிம் பரியல் கிரவுண்ட் வக்ஃபில் பல நூறு வருடங்களாக தொழுகை நடத்தியும் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்து வருவதற்கு இடையூறுகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் தமுமுக மாநில தலைமை பிரதிநிதி சுல்தான் , கோவை வடக்கு மாவட்ட தலைவர் மு.அப்துல் ஹக்கீம், 
தமுமுக மத்திய மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மத்திய மாவட்ட செயலாளர் இப்ராஹிம், கோவை மாவட்ட அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை சமூக மக்களின் வழிபாட்டு தளத்திற்கு அரசு தரப்பில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வது குறித்தும்  வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூலம் சிறுபான்மையினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளால் அதிகாரிகளுடனும் விரிவாக பேசபட்டது.

இதற்கான தீர்வுகள் விரைவாக ஏற்படுத்தபடும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.