இந்தியா கூட்டணி சார்பில் வாக்குரிமையை பறிக்கும் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் மத்திய அரசுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் உத்தரவின் படி நாடு முழுவதும் ஒன்றிய பாஜக
கட்சியின் முகத்திரையை கிழித்திடும் வகையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புணர்வேடு இருக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று உதிரவிட்டதை தொடர்ந்து
கிருஷ்ணகிரியிலும் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்களான மதியழகன், ராமசந்திரன், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு தமிழர்களின் வாக்குகளை சதிதிட்டம் மூலம் பறிக்கும் எஸ்.ஆர். ஐ .என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்.
மேலும் மத்திய அரசின் நாள் தேறும் பல்வேறு சதி திட்டங்களை கொண்டு வந்தாலும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய கூட்டணியை ஒன்று அசைக்க முடியாது என வலியுறுத்தி கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி. சேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், உமர், நாரயாண மூர்த்தி, கிராம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பரமணி, ரயில்வே திட்ட குழு உறுப்பினர் ரகமத்துல்லா, மாநில செயலாளர் ஆறுமுகம், காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் ஶ்ரீ ராம், நகர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சத்திவேல், மாவட்ட செயலாளர் புல்லட் மணி, அஸ்லாம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் தகி, மீனவரணிசெல்வம், குட்டி, அப்சல், சித்திக் ஓசூர், அக்பர் ஆடிட்டர் வடிவேல், ராமன், செல்வாஜ், தனஞ்செயன், ஜாக்கப், சத்திவேல், நீலக்கண்டன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
