முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளினை முன்னிட்டு பழையப்பேட்டையில் நகர அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!
தென்காசி
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளினை முன்னிட்டு பழையப்பேட்டையில் நகர அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38-ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது,
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்வில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளினை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படங்களுக்கு நகர செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்றது,

இதனைத்தொடர்து கிருஷ்ணகிரி பழையப் பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட அதிமுக மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், முன்னாள் சேர்மன், திருமதி பரிதா நாவாப், முன்னாள் நகர செயலாளர் நவாப், நகர துணை செயலாளர் குரு மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
