வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட B.L.0 பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும், தேசிய மக்கள் மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவர் டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதி தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களின் ஆலேசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியர் ஷாஜாஹான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் பிரகாஷ், ஆணையாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கடசியை சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் 2026 -ல் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும், அதற்கான பணிகளில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்,
குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக கொடுக்கபட்டுள்ள எஸ்.ஐ. ஆர். படிவத்தினை பூர்த்தி செய்து விரைவாக அந்தந்த பி.எல்.ஓ. பணியாளர்களிடம் கொடுக்க முன்வர வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் ஷாஜாஹான் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். படிவத்தினை வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பி.எல்.ஓ. பணியாளர்கள் வழங்கி வருகின்றனர், இப்பணியாளர்கள் மிக குறைந்த அளவிலேயே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஆகையால் இப்பணிகளை விரைவாகவும், சிரமமின்றி செய்து முடிக்க பி.எல்.ஓ. பணியாளர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்தக் கூட்டத்தின் போது வருவாய் கோட்டாட்சியர் ஷாஜாஹான், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்து போனவர்களின் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். இதனை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த டாக்டர் சந்திரமோகன் பெற்றுக் கொண்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
