கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். !

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள ரவுண்டானா அருகில் நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமையில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சோனியா காந்தி இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டி காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பியதோடு காங்கிரஸ் கட்சியை கிராமங்கள் தோறும் வலிமைப்படுத்தி, ராகுல் காந்தியை இந்திய திருநாட்டின் பிரதமராக்குவேம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

இதன் முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை மாவட்டத் துணைத்தலைவரும், ரயில்வே கோட்ட கமிட்டி உறுப்பினருமான தளபதி ரகமத்துல்லா வரவேற்புரையாற்றினார்.

சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆறுமுக சுப்பிரமணி, டாக்டர் தகி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, முன்னாள் நகர தலைவர்கள் ரமேஷ் அர்னால்டு,  வின்சென்ட், மாவட்ட பொது செயலாளர் அப்சல், மாவட்ட செயலாளர்கள் சக்கரவர்த்தி, ஆஜித் பாஷா, முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், இருதயம், பிரஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்.

சோனியா காந்தியின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் கவுன்சிலர் முபாரக், முன்னாள் நகர துணைத் தலைவர்கள் இருதயம், வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், ராகுல் பேரவை விஜயராஜ்( எ)குட்டி, ஏழுமலை, அன்புராஜ், மொயின்கான், முஸ்தாக், கொத்தூர் முனீர், துரைசாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ