ரூ.6 கோடி மதிப்பீட்டில்  600 நபர்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா.!

கிருஷ்ணகிரி

ரூ.6 கோடி மதிப்பீட்டில்  600 நபர்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா.!

கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை ஒன்றியம்  ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரூ.6 கோடி மதிப்பீட்டில்  600 நபர்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் 700 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்கத்திற்கான பற்று அட்டை, ரூ.1 கோடியே 29 இலட்சம் மதிப்பீட்டில் 94 பயணிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம்,  ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கடப்பாறை அணைக்கட்டு கட்டுவதற்கு பணி ஆணைகளை தமிழ்நாடு உணவு மற்றும் உணவு  பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA  ஆகியோர் வழங்கினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ