தமிழ்நாட்டில் மூலை மூலைக்கு சாராயம், கஞ்சா என கஸ்தூரி பேட்டி. !
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் வருகை தந்த நடிகை கஸ்தூரி செய்துயாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
'அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தை காசி விசுவநாதர் கோவிலில் இருந்து தொடங்க இருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கும் வெளிநாட்டில் இருந்து புலம்பெயரும் மக்களும் அனைவருக்கும் நல்ல காலத்தையும் உண்மையான வெளிச்சத்தையும் விடையும் கொடு என சாமி தரிசனம் செய்யப் போகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் எப்படி தீபம் எறிய போகின்றதோ அதேபோல் எங்களது வாழ்விலும் வெளிச்சம் வர வேண்டும் என திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விசுவநாதரிடம் வேண்டிக் கொள்வதற்காக செல்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. மு க ஸ்டாலின் சொன்ன சொல் தவறக் கூடாது என்பதற்காக விடியல் தர போறாரு என்று தான் சொன்னார்கள் விடியல் தந்துவிட்டால் தவறாக இருக்கும் என்பதால் எதிர்காலமாகவே வைத்துள்ளனர்.
மூலை மூலைக்கு போதைப் பொருள், சாராயம்
தமிழகத்தின் மூலைக்கு மூலை சாராயம் போதை பொருள் கிடைக்கிறது. இதனை கேட்டால் இரும்பு கரம் என கூறுகிறார்கள். திமுகவிற்கு வாக்களித்தவர்களே அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்து வருகின்றனர். திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அடுத்த தேர்தலே வர உள்ளது. எப்போது தான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்?
தமிழகத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுவிலக்கு துறையில் மட்டும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அவர்களை மது போதையிலேயே அரசு வைத்துள்ளது. ரஜினி ஒரு முறை கடவுள் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று சொன்னார். அவர் இன்று என்ன சொல்வார் என்று நான் கேட்க விரும்புகிறேன்.
நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான்...
என் அப்பன் சுப்ரமணிய சுவாமி மட்டும் தான் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும் என்று வந்துவிட்டேன்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயர் ரக கஞ்சா ஓ ஜி என்ற வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான். ஆனால் கேஜி கேஜியாக ஓஜியை காவல்துறை கைப்பற்றி உள்ளனர். அந்த ஓ ஜி வகை கஞ்சாவைத்தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஓ என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் போல். செடினா அங்க ஒன்னு இங்க ஒன்னு வளர தான் செய்யும், போதை நா அங்க ஒன்னு இங்க ஒன்னு போட தான் செய்வாங்க, அங்க ஒன்னு இங்க ஒன்னு வெட்டி சாய்க்க தான் செய்வாங்க என்று அமைச்சர் பெருமக்கள் பேசுகிறார்கள். தமிழகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்து அச்சமாக உள்ளது. அதனால் கடவுளை பார்த்து கெஞ்ச போகிறேன்.' என்று கூறினார்
