தென்காசியியில் வெளுத்து வாங்கிய தொடர் கன மழை! இடம் மாற்றிய பிறகும் அரங்கை நிறைத்த ம ஜ க வினர்.!
தென்காசி
தென்காசியியில் வெளுத்து வாங்கிய தொடர் கன மழை! இடம் மாற்றிய பிறகும் அரங்கை நிறைத்த ம ஜ க வினர்.!
மஜக கூட்டத்தில் உற்சாகம்!
தென்காசி நவ 25
தென்காசிமனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தென்காசியில் பெய்த கனத்த மழை தொடர்ந்த நிலையில், இக்கூட்டத்தை நடத்துவதா ?வேண்டாமா ? ஒரு நிலை ஏற்பட்டது .

மாலை 4 மணிக்கு பிறகு மழை வலுக்கும் என வானிலை அறிவிப்பு கூறியதுடன் , உடனடியாக பொதுக் கூட்டம் ரத்து செய்யப் பட்டு, அவசர அவசரமாக புதிய அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப் பட்டது.மாலை 6 மணிக்கு பிறகு மழை பலமாக பெய்யத் துவங்கியது.
அரங்கிற்குள் தென்காசி மனித நேய கட்சியினர் திரண்டு வந்தனர் .
அப்போது உற்சாகமடைந்த நிர்வாகிகள்,
மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும், வெல்லட்டும்
வெல்லட்டும் சமூகநீதி வெல்லட்டும் மனிதநேய ஜனநாயக கட்சி
சேவை அரசியலில் மனசாட்சி என்ற முழக்கங்களை எழுப்பினர் .

கொட்டும்மழையில் அரங்கிற்கு வெளியேயும் கூட்டம் குடைகளுடன் நின்றனர்.கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன்அன்சாரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடைய மாநிலத் துணைத் தலைவர் சுந்தரவல்லி ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.
சுந்தரவல்லி பேசும்போது கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு எழுச்சியாக மக்கள் திரண்டிருப்பது, மஜகவின் எழுச்சியை காட்டுகிறது என்று வியந்து பாராட்டினார்
இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட மஜக செயலாளர் யாகூப் தலைமை வகித்தார்.
இதில் மஜக மாநில துணைச் செயலாளரும் மேலிட பொறுப்பாளருமான நெல்லை பிலால், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் நெல்லை மாவட்ட மஜக செயலாளர் பாளை பாரூக், IUML பேச்சாளர் முகமது அலி, விசிக மாநில துணைச் செயலாளர் சித்திக், INLP மாநிலத் துணைத் தலைவர் சுலைமான் சேட், கவுன்சிலர் ராசப்பா உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
மஜக மாவட்ட அவை தலைவர் சையத் அலி, மாவட்ட பொருளாளர் சிக்கந்தர், துணைச் செயலாளர் அப்துல் ரசாக், ஒன்றிய செயலாளர் முகமது அலிஜின்னா, நகர செயலாளர் போரிங் பாதுஷா, நகர பொருளாளர் கோபிநாத், திமுக மகளிர் அணி செயலாளர் பேபி ரஜப்பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
