தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழு கூட்டம்.!

தென்காசி

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழு கூட்டம்.!

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழு கூட்டம்

விவசாய அணி தேசிய தலைவர் பங்கேற்பு 

தென்காசி டிச.26

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விவசாய அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநில தலைவர் அப்துல் ஹாதி தலைமை வகித்தார்.

விவசாய அணி மாநில துணை தலைவர்கள்; அபுதாகீர், முகமது அலி, ஜெய்னுலாபுதீன், விவசாய அணி மாநில செயலாளர்கள் லியாகத்அலிகான், நெல்லை அப்துல் மஜூத், தென்காசி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ்,  மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி,  மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, திருநெல்வேலி மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.

விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் அஜ்மீர்காஜா வரவேற்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக விவசாய அணி தேசிய தலைவர் ஹாஜி.கொரிகோலி மொய்தீன், விவசாய அணி தேசிய பொதுச் செயலாளர் ஹாஜி முகமது குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஜனவரி 28 ல் நடை பெறும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு அணி திரண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இந் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட  மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முகமது அபூபக்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் தீய சக்தி, தீய சக்தி என்று திமுகவை மட்டுமே குறிவைத்து திட்டுகிறார். அவர் மக்கள் விரோத பாஜகவை குறை கூறுவதே கிடையாது.

பாஜக சிறுபான்மையினரின் ஓட்டுகளை பிரிப்பதற்காக பல்வேறு
சூழ்ச்சிகளை செய்து வருகிறது..

தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 8000 ஜமாத்தார்களை சந்தித்து இப்போதே திமுக கூட்டணிக்கு வாக்குகளைத் திரட்ட வேலை செய்து வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழு சதவீதம் உள்ளனர் ஆனால் எங்களுக்கு போதுமான மக்கள் பிரதிநிதிகள் இல்லை எனவே வர இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எங்களது கட்சிக்கு 16 தொகுதிகளை கேட்க உள்ளோம்.

அதில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளை கேட்டு பெறுவோம் குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டு பெறுவோம் .

திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைய எங்களது கட்சி தொடர்ந்து பாடுபடும் என தெரிவித்தார்.  முடிவில் விவசாய அணி மாநில பொருளாளர் உதுமான் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்