நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம். !

கிருஷ்ணகிரி

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம். !

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை செயிண்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.

நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 1362 நபர்கள் பதிவு செய்து, மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

கெலமங்கலம் வட்டாரத்தில் நடைநடைபெற்ற இரண்டு "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 142 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் குறைபாடு கண்டறியும் ஸ்கேன் (Anomaly scan) குளோபல் தனியார் ஸ்கேன் சேவையாக செய்து வரும் மரு.மோரிஸ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தளி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ