துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழா. !
கிருஷ்ணகிரி
திமுகழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் மாலை அணிவித்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் அதனைத் தொடர்ந்து இளம் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கண் பரிசோதனை செய்து(1000) ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி புனித அண்ணாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுடன் கேக் வெட்டியும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் என் அஸ்லம், கிழக்கு நகர கழக பொறுப்பாளர் எம்.வேலுமணி மற்றும் கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
