ஓசூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக புதிய பேருந்துகள் இயக்கம்!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டு புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் மற்றும் இரண்டு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை மாநில உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசு போக்குவரத்து துறையின் சேலம் மண்டலம் சார்பில் புதிய பேருந்துகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் மாநில உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் ஓசூரில் இருந்து பாகலூர், பேரிகை, அத்திபள்ளி, சிப்காட், அசோக் லேலண்ட், ஒன்னல்வாடி, மத்திகிரி உள்ளிட்ட எட்டு இடங்களில் புதிய பேருந்துகள், ஓசூரில் இருந்து மாவத்தூர், மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு கலைக் கல்லூரி வரையில் பேருந்து நீட்டிப்பும், எட்டு பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் மூலமாக தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் அதிகளவில் பயன்பெறுவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ