அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார்.

உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் வை.குமார், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் சி.ஆனந்தைய்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
