திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் குழுவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் எல். சுப்பிரமணியன் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் குழுவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் எல். சுப்பிரமணியன் பங்கேற்பு.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்ட வாரியாக சென்று மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதே போல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தகுதியான தலைவர்கள் தேர்வு செய்வதற்கான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ரங்கசாமி தலையில் கமிட்டி அமைக்கப்பட்டு தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது.
மேலும் இந்த கமிட்டியில மாநில செயற்குழு உறுப்பினர்
ரங்கபாச்சியம் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான எல் . சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நேர்காணலில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வழிக்காட்டுதலின் படி நடைபெற்ற இந்த நேர்காணலில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
