தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை அமல்படுத்தியதை திரும்ப பெற, மத்திய அரசை வலியுறுத்தி விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை அமல்படுத்தியதை திரும்ப பெற, மத்திய அரசை வலியுறுத்தி விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விசிக மற்றும் இடது சாரிகள் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள  தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்  வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ், சி.பி.எம்.சுரேஷ், சி.பி.ஐ. சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர்கள் சாமி நடராஜன், சந்திரமோகன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், ஸ்டாலின் பாபு மற்றும் விசிக கட்சியை சேர்ந்த நகர செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், ராமசந்திரன், குபேந்திரன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் இந்த போராட்டம் வாயிலாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, நான்கு சட்ட தொகுப்புகளாக கொண்டு வந்து, புதிய விதிகளை இம்மாதம் 21ம் தேதி அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், அவற்றை உடனடியாக மத்திய அரசு  திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசினைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு மந்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ