கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில், பாஜக,  தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதமாக SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில், பாஜக,  தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதமாக SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில், பாஜக,  தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதமாக SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுன்ற உறுப்பினர் கோபிநாத் மத்திய அரசு கொண்டு வந்துள்ள SIR வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டி நாயனப்பள்ளியில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தியின் திருஉருவச் சிலை அருகில் பாஜக - வின்  தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதமாக SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல் . சுப்பிரமணியன் தலைமையில் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SIR என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் பழைய முறைப்படியே இருக்க வேண்டும் என்று கண்டன
கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் ஒரு அங்கம்தான் இது.
குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது . 
 
வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற SiR சட்டத்தை நடைமுறைப் படுத்துகிற சதி முயற்சிதான் இது.  வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்று கிருஷ்ணகிரி காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமர், பாண்டுரங்கன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் ஜாக்கப், நகர தலைவர் யுவராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னீர் செல்வம், கண்ணன், யாதவராஜ், அன்பரசன், மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ