நமக்கு நாமே திட்டம் மூலம் புதிய வகுப்பறை கட்டிக் கொடுத்த ISRO - ஆதித்யா ட. 1 இயக்குநர் விஞ்ஞானி நிகர் ஷாஜி.!
தென்காசி
ISRO - ஆதித்யா ட. 1 இயக்குநர் விஞ்ஞானி நிகர் ஷாஜி தான் படித்த தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டம் மூலம் புதிய வகுப்பறை கட்டிக் கொடுத்தார்,அதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தலைமையில் நடை பெற்றது. இதில் முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா , மாவட்டக் கல்வி அலுவலர் கண்ணன்
பேராசிரியர் சேக் சலீம், மருத்துவர் மீரான்,
ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவா செய்திருந்தார்.இந் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட செயலர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விஞ்ஞான துளிர் புத்தகம் வழங்கி வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
