தென்காசியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியலில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது .!
தென்காசி

தென்காசியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியலில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது
தென்காசி ஜூலை 9
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று நடை பெறுவதாக மாநிலச் சங்கம் கூறியதைத் தொடர்ந்து தென்காசி தலைமை தபால் நிலையம் அருகே தொழிற் சங்கங்களின் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டன இந் நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்பையா ஏ ஐ டி யு சி கண்ணன் ஐஎன்டி யூசி உச்சிமாகாளி சிபிஎம் மாவட்ட செயலாளர் பட்டாபிராமன் வட்டார செயலாளர் லெனின் குமார் கட்டுமான சங்கம் பட்ட முத்து மின் ஊழியர் மத்திய அமைப்பு ஐயப்பன் புது தொழிலாளர் சங்கம் ராஜசேகரன் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் குருசாமி பீடி சங்கம் முத்துலட்சுமி தையல் சங்கம் பத்மா அங்கன்வாடி ஊழியர் சங்கம் பொன்மலர் போக்குவரத்து ஊழியர் சங்கம் லெனின் சாலை போக்குவரத்து சங்கம் ராமமூர்த்தி மண்டல தலைவர் தான மூர்த்தி ஓய்வு பெற்றோர் போக்குவரத்து சங்கம் ஏ ஐ டி யு சி கிட்டப்பா உள்உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர்அவர்களை கைது செய்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்